உதவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உதவி1உதவி2

உதவி1

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  ஒருவர் நன்மை அடையும்படி பிறர் செய்யும் செயல்; ஒருவருடைய வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்; ஒத்தாசை.

  ‘வங்கியின் உதவியுடன் இந்தக் கடையைத் தொடங்கினேன்’
  ‘வீடு மாற்றும்போது நீங்கள் செய்த உதவிக்கு நன்றி’
  ‘கடையில் உதவிக்கு ஒரு பையனை வைத்திருக்கிறேன்’

 • 2

  (ஒரு பொருளின்) துணையால் கிடைக்கும் நன்மை.

  ‘புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்’
  ‘மின்விளக்கின் உதவியைக் கொண்டு இரவு முழுவதும் கட்டட வேலை நடந்தது’
  ‘கடை வைப்பதற்கு அவர் கொடுத்த பணம்தான் உதவியாக இருந்தது’

உதவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உதவி1உதவி2

உதவி2

பெயரடை

 • 1

  பதவியில் அல்லது பணியில் உயர் நிலைக்கு அடுத்த கீழ் நிலையைக் குறிக்கும் சொல்.

  ‘உதவிப் பதிவாளர்’
  ‘உதவி இயக்குநர்’
  ‘பத்திரிகையின் உதவி ஆசிரியர்’