தமிழ் உதைப்பு யின் அர்த்தம்

உதைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தவறு செய்திருக்கும்போது) உள்ளூர ஏற்படும் மனக் கலக்கம்; உதறல்.

    ‘தாமதமாக அலுவலகத்துக்குச் சென்றதால் அவனுக்குச் சற்று உதைப்பாகவே இருந்தது’
    ‘மூன்று மாதமாக வாடகை தராததால் வீட்டுக்காரனைப் பார்த்ததும் அவனுக்கு உதைப்பு ஏற்பட்டது’