தமிழ் உபதேசி யின் அர்த்தம்

உபதேசி

வினைச்சொல்உபதேசிக்க, உபதேசித்து

 • 1

  சமய உண்மைகளைக் கூறுதல்; போதித்தல்.

  ‘இறைவன் ஆசாரியராகத் தோன்றி மாணிக்கவாசகருக்கு உபதேசித்தார்’

 • 2

  (மந்திரம்) கற்றுத்தருதல்.

  ‘நான் உபதேசிக்கும் மந்திரத்தை உச்சரித்தால் மனத்தில் அமைதி உண்டாகும்’

 • 3

  (ஒரு செயலைச் செய்யும்படி பெரியோர்) அறிவுறுத்துதல்.

  ‘நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருங்கள் என்று உபதேசித்தார்’