தமிழ் உப்புப்பூ யின் அர்த்தம்

உப்புப்பூ

வினைச்சொல்-பூக்க, -பூத்து

  • 1

    (வியர்வை காய்ந்து தோலின் மீது) உப்பு படிந்து வெள்ளைவெள்ளையாகக் காணப்படுதல்.

    ‘உடம்பெல்லாம் உப்புப்பூத்திருக்கிறது; போய்க் குளி!’

  • 2

    (உப்புக் காற்றால்) அரிக்கப்படுதல்.

    ‘கடற்கரையில் ஒதுங்கியிருந்த பூநாரையின் உடல் உப்புப்பூத்திருந்தது’