தமிழ் உம்கொட்டு யின் அர்த்தம்

உம்கொட்டு

வினைச்சொல்உம்கொட்ட, உம்கொட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் பேசும்போது அல்லது ஒன்றைச் சொல்லும்போதுதான் கவனித்து வருவதைத் தெரிவிக்கும் முறையில் மற்றவர்) ‘உம்’ என்ற ஒலி எழுப்புதல்.

    ‘அம்மா கதை சொல்லச்சொல்ல, குழந்தைகள் உம்கொட்டினார்கள்’
    ‘அவள் உம்கொட்டுவதை நிறுத்தியவுடன் அவன் திரும்பிப் பார்த்தான்’