தமிழ் உயரம் யின் அர்த்தம்

உயரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவரின் அல்லது ஒன்றின்) அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை உள்ள அளவு.

  ‘கட்டடத்தின் உயரம் நூற்றுப் பத்து அடி’
  ‘உன் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லை’

 • 2

  சராசரி உயரத்தைவிட அதிகம்; அதிக உயரம்.

  ‘ஆள் உயரமாகவும் வாட்டசாட்டமாகவும் இருப்பார்’
  ‘உயரமான மலை’

 • 3

  (ஒருவரது புகழ், செல்வாக்கு போன்றவற்றைக் குறிப்பிடும்போது) உயர்ந்த நிலை; உச்சம்.

  ‘அவர் கலை உலகில் புதிய உயரங்களை எட்டியிருக்கிறார்’