தமிழ் உயிர்விடு யின் அர்த்தம்

உயிர்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (தீவிரமாக நம்பும் கொள்கைக்காக) உயிரை இழத்தல்; இறத்தல்.

  ‘இது போரில் உயிர்விட்ட வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட சின்னம்’

 • 2

  (குறிப்பிட்ட) ஒன்றுக்காகவே வாழ்க்கையை வாழ்தல்.

  ‘பணம், பணம் என்று ஏன் இப்படி உயிர்விடுகிறாய்?’
  ‘கட்சி, அரசியல் என்று உயிர்விடுபவர் தன் குடும்பத்தைக் கவனிப்பதில்லை’