தமிழ் உயிரை விடு யின் அர்த்தம்

உயிரை விடு

வினைச்சொல்விட, விட்டு

  • 1

    (ஒருவரிடம்) மிகுந்த பாசம் காட்டுதல்.

    ‘அவள் ‘அண்ணா, அண்ணா’ என்று என்னிடம் உயிரை விடுவாள்’

  • 2

    (ஒருவர் தான் மிகவும் முக்கியம் என்று கருதும் ஒன்றுக்காக) வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்தல்.

    ‘குடும்பத்தைக் கவனிக்காமல் கட்சிக்காக உயிரை விடுகிறான்’