தமிழ் உரசு யின் அர்த்தம்

உரசு

வினைச்சொல்உரச, உரசி

 • 1

  உராய்தல்.

  ‘வெள்ளாடு ஒன்று மரத்தில் உரசிக்கொண்டிருந்தது’
  ‘மிதிவண்டியில் பின் சக்கரம் எந்த இடத்திலோ உரசுகிறது’

 • 2

  (ஒன்றை ஒன்றின் மேல்) தேய்த்தல்.

  ‘மழைக் காலத்தில் தீப்பெட்டிகளில் குச்சியை எத்தனை முறை உரசினாலும் பற்றிக்கொள்வதில்லை’
  ‘கிழங்கை வேகவைக்கும் முன் கல்லில் உரசிக் கழுவு’
  ‘பொற்கொல்லர் தங்கத்தை உரசிப் பார்த்தார்’