தமிழ் உருட்டு யின் அர்த்தம்

உருட்டு

வினைச்சொல்உருட்ட, உருட்டி

 • 1

  (ஒரு பொருளுக்கு உருண்டை வடிவம் தருதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (பந்துபோல்) உருண்டையாக்குதல்

   ‘அம்மா சாதத்தில் பருப்புப் போட்டுப் பிசைந்து உருட்டிக் கையில் போட்டாள்’
   ‘பிள்ளையார் செய்யக் களிமண்ணைத் தரையில் அறைந்து உருட்டினார்’

 • 2

  (உருண்டை அல்லது வட்ட வடிவத்தில் இருப்பதை நகரச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கண்களை) சுழற்றுதல்

   ‘குழந்தை கண்களை உருட்டிஉருட்டிப் பார்க்கும் அழகே தனி!’

  2. 2.2 உருளச் செய்தல்; உருண்டு ஓடச் செய்தல்

   ‘நலுங்கில் மணமக்கள் தேங்காயை உருட்டி விளையாடினார்கள்’
   ‘வாய் மந்திரம் உச்சரிக்க, கை உத்திராட்சத்தை உருட்டிக்கொண்டிருந்தது’
   ‘கையில் தடியை உருட்டியபடி நின்றிருந்தார்’

  3. 2.3 (உருளச் செய்து) தள்ளுதல்

   ‘காற்று இறங்கிவிட்டதால் சைக்கிளை உருட்டிக்கொண்டு வருகிறேன்’
   ‘திரைப்படத்தில் குன்றின் உச்சியிலிருந்து பாறையை உருட்டிவிடும் காட்சி அருமை!’

 • 3

  (மரபு வழக்கு)

  1. 3.1 பொருள்களை அங்குமிங்கும் நகர்த்திச் சத்தம் உண்டாக்குதல்

   ‘ராத்திரி பத்து மணிக்கு எதை உருட்டிக்கொண்டிருக்கிறாய்?’

  2. 3.2 (பெரும்பாலும் தலை என்னும் சொல்லோடு இணைந்து) (ஒரு விவகாரத்தில் சம்பந்தப்படாதவரை) தொடர்புபடுத்துதல்

   ‘நான் உங்களுக்கு என்ன செய்தேன்? என் தலையை ஏன் வீணாக உருட்டுகிறீர்கள்?’