தமிழ் உருப்படி யின் அர்த்தம்

உருப்படி

பெயர்ச்சொல்

 • 1

  (எண்ணக்கூடிய) பொருள்.

  ‘சலவைக்கு மொத்தம் எத்தனை உருப்படிகள் போட்டாய்?’

 • 2

  இசைத்துறை
  கிருதிகள், கீர்த்தனைகள் போன்ற இசை வடிவங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  ‘ஒரு ராகத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள அந்த ராகத்தில் பல உருப்படிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்’