தமிழ் உருள் யின் அர்த்தம்

உருள்

வினைச்சொல்உருள, உருண்டு

 • 1

  (படுத்த நிலையில்) பக்கவாட்டில் தொடர்ந்து ஒரே திசையில் மீண்டும்மீண்டும் புரண்டு நகர்தல்.

  ‘என் மனைவிக்குப் பக்கத்தில் படுத்திருந்த குழந்தை உருண்டு என்னிடம் வந்துவிட்டது’

 • 2

  (உருண்டை வடிவப் பொருள்கள் அல்லது சக்கரம் போன்றவை விசையால்) இடம்பெயர்தல்.

  ‘கோலிக்குண்டு உருண்டு குழியில் விழுந்தது’
  ‘கீழே விழுந்த நாணயம் தரையில் உருண்டு சென்றது’
  உரு வழக்கு ‘அதற்குள் ஓர் ஆண்டு உருண்டோடிவிட்டதா?’

 • 3

  கீழ் நோக்கிப் புரண்டு விழுதல்.

  ‘மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து வளைவில் திரும்பும்போது பள்ளத்தில் உருண்டது’

 • 4

  (பெரும்பாலும் தலை என்பதோடு இணைந்து) (ஒரு பிரச்சினையில் ஒருவரின்) பெயர் அடிபடுதல் அல்லது தொடர்புபடுத்தப்படுதல்.

  ‘நடந்த விஷயத்துக்கும் எனக்கும் துளிகூடச் சம்பந்தம் கிடையாது. ஆனால் என் தலைதான் உருள்கிறது’