தமிழ் உருவம் யின் அர்த்தம்

உருவம்

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதன், விலங்கு முதலியவற்றின்) வெளித்தோற்றம்; முழு உடல்.

  ‘உருவத்தில் சிறியவர்’
  ‘யானையின் பெருத்த உருவம்’

 • 2

  (மனித, தெய்வ) வடிவத்தின் பிரதி அல்லது நகல்.

  ‘அழகான பெண்ணின் உருவத்தை அட்டைப் படத்தில் போட்டு விளம்பரம்செய்கிறார்கள்’
  ‘கோயிலில் சம்பந்தரின் வெண்கல உருவம்’

 • 3

  (ஏதோ ஒன்று இருப்பது மட்டும் புலனாகும்படி உள்ள) நிழல் வடிவம்.

  ‘லேசான இருட்டில் தெரிந்த அந்த உருவம் நகரத் தொடங்கியது’