தமிழ் உருவாகு யின் அர்த்தம்

உருவாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  (புதிதாக ஒரு இயற்கை நிகழ்வு அல்லது அமைப்பு) தோன்றுதல்; உண்டாதல்.

  ‘வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும்’
  ‘மே மாதக் கடைசி வாக்கில் அரபிக் கடலில் மழை மேகங்கள் உருவாகின்றன’
  ‘இந்தியத் துணைக்கண்டத்தில் பல பேரரசுகள் உருவாகி அழிந்தன’
  ‘போன நூற்றாண்டில் உருவாகிய நகரம் இது’
  ‘இந்தக் கட்சி உருவாகப் பாடுபட்டவர்’
  உரு வழக்கு ‘மறுமலர்ச்சி பெற்றுப் புதிய சமுதாயம் உருவாகும்’

 • 2

  (ஒருவருடைய முயற்சியால்) வெளிவருதல்.

  ‘இவரால் பல மாணவர்கள் உருவாயினர்’

 • 3

  (கருத்து, உணர்ச்சி முதலியன) எழுதல்; ஏற்படுதல்; உண்டாதல்.

  ‘அவரைப் பற்றிய தெளிவான கருத்து நமக்கு உருவாகிறது’
  ‘ஒரு தாயின் உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்’