தமிழ் உருவேற்று யின் அர்த்தம்

உருவேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    (ஒருவரைத் தன் வழிக்குக் கொண்டுவருவதற்காக ஒன்றை மீண்டும்மீண்டும் சொல்லி அவர்) மனத்தில் பதியச் செய்தல்.

    ‘நீ சொல்லுகிறபடி எல்லாம் கேட்கிற அளவுக்கு அவனை உருவேற்றி வைத்திருக்கிறாயா?’

  • 2

    அருகிவரும் வழக்கு (இறைவனை நினைத்து மெல்லிய குரலில் மந்திரத்தை) திரும்பத்திரும்பச் சொல்லுதல்.