உறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உறி1உறி2

உறி1

வினைச்சொல்உறிய, உறிந்து

 • 1

  உறிஞ்சுதல்.

  ‘மூக்கை உறியாதே!’

உறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உறி1உறி2

உறி2

பெயர்ச்சொல்

 • 1

  (வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு.

  ‘உறியிலிருந்து வெண்ணெய் திருடி உண்ட கண்ணனைப் பற்றி எத்தனை கதைகள்!’
  ‘இப்போதெல்லாம் உறி போன்று செய்து அதில் பூந்தொட்டி வைக்கிறார்கள்’