தமிழ் உறிஞ்சு யின் அர்த்தம்

உறிஞ்சு

வினைச்சொல்உறிஞ்ச, உறிஞ்சி

 • 1

  (உதடுகளைக் குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை) உள்ளிழுத்தல்; (மூக்கினால் மூக்குப்பொடி முதலியவற்றை) உள்ளிழுத்தல்.

  ‘பேசி முடித்துவிட்டுக் கோப்பையை எடுத்துத் தேநீரை உறிஞ்சினார்’
  ‘கன்றுக்குட்டி பசுவின் மடியை முட்டிப் பாலை உறிஞ்சிக் குடித்தது’
  ‘குழந்தையின் விசும்பலும் மூக்கு உறிஞ்சலும் கேட்டது’

 • 2

  (நிலம், வேர்கள் முதலியன நீரை) உள்ளிழுத்தல்; ஈர்த்தல்.

  ‘நிலத்தின் ஆழத்தில் இருக்கும் நீரை மரத்தின் வேர்கள் உறிஞ்சுகின்றன’
  ‘காய்ந்துகிடந்த தரை மழை நீரை உறிஞ்சிவிட்டது’

 • 3

  (நீர், மண் முதலியவற்றை இயந்திரம்) மேலிழுத்தல்.

  ‘மணல் மேட்டை அகற்ற மண்ணை உறிஞ்சி வெளியில் கொட்டும் இயந்திரம் வருகிறது’