தமிழ் உறுத்தல் யின் அர்த்தம்

உறுத்தல்

பெயர்ச்சொல்

 • 1

  உடலில் எரிச்சலையும் நெருடலையும் ஏற்படுத்தும் உணர்வு.

  ‘கண்ணில் மணல்துகள் விழுந்துவிட்டதால் உறுத்தல் ஏற்பட்டது’
  ‘தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டதுபோல் ஓர் உறுத்தல்’

 • 2

  (குற்ற உணர்வு, மனசாட்சி போன்றவற்றால் மனத்தில் ஏற்படும்) குறுகுறுப்பு.

  ‘குழந்தையை அடித்துவிட்டோமே என்ற உறுத்தல் கொஞ்ச நேரம் இருந்தது’

 • 3

  இயல்பாக இல்லாமல் இடையூறாக இருப்பது; ஒன்றோடு பொருந்தாமல் இருப்பது.

  ‘இந்தப் படத்தில் பாடல்கள்தான் உறுத்தலாக இருக்கின்றன’
  ‘அவர் எதுவும் பேசாமல் போனது எனக்கு உறுத்தலாக இருந்தது’