தமிழ் உறுமு யின் அர்த்தம்

உறுமு

வினைச்சொல்உறும, உறுமி

 • 1

  (புலி, சிங்கம் போன்ற விலங்குகள் இயல்பாக அல்லது நாய், குரங்கு போன்ற விலங்குகள் கோபம், வெறி முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில்) ‘உர்உர்’ என்ற ஒலியை எழுப்புதல்.

  ‘பன்றிகள் சேற்றில் படுத்துப் புரண்டு உறுமிக்கொண்டிருந்தன’
  ‘வீட்டிற்கு வந்த புதிய ஆளைக் கண்டதும் நாய் பல்லும் ஈறும் தெரிய உறுமியது’
  உரு வழக்கு ‘காலால் உதைத்ததும் மோட்டார் சைக்கிள் உறுமிக்கொண்டு புறப்பட்டது’

 • 2

  (எரிமலை) குமுறுதல்.

  ‘இந்தோனேசியாவில் ஒரு எரிமலை இன்று காலையிலிருந்து உறுமிக்கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது’

 • 3

  (ஒருவர் கோபத்தை வெளிக்காட்டும் வகையில்) சீறிப் பேசுதல்.

  ‘‘அப்படியா செய்தான் அந்தப் பயல்?’ என்று அப்பா உறுமிக்கொண்டிருந்தார்’