தமிழ் உலாவு யின் அர்த்தம்

உலாவு

வினைச்சொல்உலாவ, உலாவி

 • 1

  (அங்கும் இங்கும் அல்லது முன்னும் பின்னும்) நடத்தல்.

  ‘மாலை நேரத்தில் கடற்கரையில் உலாவப் பலர் வருவார்கள்’
  ‘நான் அவர் வீட்டுக்குப் போனபோது அவர் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார்’

 • 2

  (மனிதர் அல்லாத பிற) நடமாடுதல்.

  ‘காட்டில் விலங்குகள் இரை தேடி உலாவிக்கொண்டிருக்கும்’
  ‘பேய் உலாவும் மாளிகை’