தமிழ் உலை வை யின் அர்த்தம்
உலை வை
வினைச்சொல்
- 1
(சோறு சமைப்பதற்காக) நீருடன் பாத்திரத்தை அடுப்பில் வைத்தல்.
‘இப்போதுதான் உலை வைத்திருக்கிறேன். இனிமேல்தான் அரிசி அரித்துப் போட வேண்டும்’ - 2
பேச்சு வழக்கு கேடு வரும்படி செய்தல்; ஆபத்து உண்டாக்குதல்.
‘மேலதிகாரியிடம் என்னைப் பற்றித் தவறாகச் சொல்லி வேலைக்கு உலை வைத்துவிட்டான்’‘முன்னெச்சரிக்கையாகச் செயல்படாததே அவனது உயிருக்கு உலை வைத்துவிட்டது’