தமிழ் உள் யின் அர்த்தம்

உள்

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஓர் இடத்தில் ஒன்று அல்லது ஒருவர்) காணப்படுதல் அல்லது இருத்தல்.

  ‘அவன் கன்னத்தில் ஒரு மச்சம் உள்ளது’
  ‘தமிழில் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் உள்ளனர்’
  ‘அந்தக் கருவியில் உள்ள சில பாகங்கள் வேலை செய்யாததால் அதை அப்படியே விட்டுவிட்டார்கள்’
  ‘கோயிலுக்கு எதிரில் நிறைய பூக்கடைகள் உள்ளன’
  ‘இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப வழி உள்ளதா?’
  ‘அந்தப் புகைப்படத்தில் உள்ள பெண் யார்?’

 • 2

  உயர் வழக்கு நிலையாக இருத்தல்.

  ‘இமயமலை இந்தியாவில் உள்ளது’
  ‘இந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ளது’
  ‘இந்தத் தீவு கிழக்கில் உள்ளது’

 • 3

  உயர் வழக்கு குறிப்பிட்ட நிலையில் அல்லது முறையில் அல்லது வடிவில் அமைதல்.

  ‘நீர் கலங்கலாக உள்ளது’
  ‘இந்தச் சேலை புதிதாக உள்ளதே?’
  ‘புதுமையான பெயராக உள்ளதே!’
  ‘அந்த மூட்டை கனமாக உள்ளதால் என்னால் தூக்க முடியவில்லை’
  ‘குழந்தைகளின் படிப்புக்காக நாங்கள் இருவரும் வேலைபார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்’

 • 4

  உயர் வழக்கு (குறிப்பிடப்படும் இடத்தில் ஒருவர்) தங்குதல்; வசித்தல்.

  ‘அவர் பத்து வருடங்களாக மயிலாப்பூரில் உள்ளார்’
  ‘நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதம் மக்கள் கிராமத்தில் உள்ளனர்’

 • 5

  உயர் வழக்கு (நான்காம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றுமை உருபு இணைந்த பெயர்ச்சொல்லுடன்) உடையதாக இருத்தல்; வைத்திருத்தல்; (குணம் முதலியவற்றை) கொண்டிருத்தல்.

  ‘அவருக்கு ஒரு வீடு உள்ளது’
  ‘குழந்தைக்கு இன்னும் காய்ச்சல் உள்ளது’
  ‘பூவில் மணம் உள்ளது’
  ‘நிறைய வேலைகள் உள்ளதால் அவனுடன் சினிமாவுக்கு வர முடியாது என்று அவள் கூறிவிட்டாள்’
  ‘எனக்கு உள்ள ஒரே பிரச்சினை நேரத்தை எப்படிக் கழித்துத் தீருவது என்பதுதான்’

 • 6

  உயர் வழக்கு நினைவில் தங்குதல் அல்லது பதிதல்.

  ‘அவனை நான் முதலில் சந்தித்த அந்த நாள் நன்றாக நினைவில் உள்ளது’

 • 7

  உயர் வழக்கு ஒன்று நிகழ்வதற்குக் குறிப்பிட்ட அளவு நேரம் எஞ்சுதல்.

தமிழ் உள் யின் அர்த்தம்

உள்

துணை வினை

 • 1

  ஒரு செயல் கூடிய விரைவில் நிகழப்போவதைத் தெரிவிக்கப் பயன்படும் துணை வினை.

 • 2

  முதன்மை வினை குறிப்பிடும் செயல் நிகழ்ந்துவிட்ட பிறகு அமையும் நிலையைத் தெரிவிக்கும் துணை வினை.

தமிழ் உள் யின் அர்த்தம்

உள்

பெயர்ச்சொல்

 • 1

  (மூடியிருப்பது போன்ற அமைப்பு உடையவற்றில்)

  1. 1.1 (கட்டடம், பெட்டி போன்றவற்றில்) ஒரு திறப்பின் பின் காணப்படும் பகுதி

   ‘மனைவியை எதிர்பார்த்து அவர் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்துகொண்டிருந்தார்’
   ‘பெட்டி உள்ளுக்கு என்ன இருக்கிறது?’

  2. 1.2வட்டார வழக்கு (வீட்டின்) அறை

 • 2

  (மூடிய அமைப்பு இல்லாத பிறவற்றில்)

  1. 2.1 உடனே தெரியாதபடி தள்ளி அமைந்திருப்பது; ஒன்றிலிருந்து விலகிச்செல்வது

தமிழ் உள் யின் அர்த்தம்

உள்

பெயரடை

 • 1

  அமைப்பின் பகுதியாக அமைந்த/ வெளித் தெரியாமல் இருக்கிற.

தமிழ் உள் யின் அர்த்தம்

உள்

இடைச்சொல்

 • 1

  (வேற்றுமை உருபு ஏற்பதற்குத் தக்கவாறு திரியும் வடிவத்திற்குப் பின் அல்லது நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் சேர்க்கப்படும்போது) ‘உள்பகுதி’ என்ற பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய இடைச்சொல்.

  ‘நரி காட்டுக்குள் ஓடிவிட்டது’
  ‘காதுக்குள் ஏதோ குடைகிறது’
  ‘கிணற்றுக்குள் வாளி விழுந்துவிட்டது’

 • 2

  (வேற்றுமை உருபு ஏற்பதற்குத் தக்கவாறு திரியும் வடிவத்திற்குப் பின் அல்லது நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் சேர்க்கப்படும்போது) ‘இடையில்’ என்ற பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய இடைச்சொல்.

 • 3

  (‘அது’ ஈற்றுத் தொழிற்பெயரைத் தொடர்ந்து வரும் நான்காம் வேற்றுமைக்குப் பின்) ஒரு செயல் ‘முடிவதற்கு முன்பு’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘நான் போவதற்குள் கூட்டம் முடிந்துவிட்டது’
  ‘நான் வருவதற்குள் நீ ஏன் போனாய்?’
  ‘நான் மதுரையை அடைவதற்குள் எனக்குத் தகவல் வந்துவிட்டது’

 • 4

  (மணி, நாள் போன்ற காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து) குறிப்பிடப்படும் ‘காலப் பகுதி முடிவதற்கு முன்பு’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பத்து மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன்’
  ‘இரண்டு நாளைக்குள் பணம் ஏற்பாடு செய்துவிட முடியுமா?’
  ‘இந்திய அரசியலில் ஒரு வருடத்திற்குள் நல்ல திருப்பத்தை எதிர்பார்க்கலாம்’
  ‘அடுத்த தேர்தலுக்குள் கட்சி உடைந்துவிடும்’