தமிழ் உள்ளே தள்ளு யின் அர்த்தம்

உள்ளே தள்ளு

வினைச்சொல்தள்ள, தள்ளி

  • 1

    (ஒருவரை) சிறைக்கு அனுப்புதல்.

    ‘நீ செய்த தப்பை அவர் வெளியே சொன்னால், அவ்வளவுதான்! உன்னை உள்ளே தள்ளிவிடுவார்கள்’
    ‘அவன் மீது பொய்க்குற்றம் சுமத்தி, நிர்வாகம் அவனை உள்ளே தள்ளப்பார்க்கிறது’