தமிழ் உள்வாங்கு யின் அர்த்தம்

உள்வாங்கு

வினைச்சொல்உள்வாங்க, உள்வாங்கி

 • 1

  (ஒன்றை எல்லையாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது அந்த எல்லையிலிருந்து ஒன்று) தள்ளி அமைதல்.

  ‘அந்தச் சின்ன அறையை ஒட்டி உள்வாங்கியிருந்தது சமையல் அறை’

 • 2

  (ஒருவருடைய கண், உதடு முதலியவை) உள்ளே அமுங்கிக் காணப்படுதல்.

  ‘உடல் மெலிந்து, கண்கள் உள்வாங்கி, பார்க்கவே அவன் பரிதாபமாக இருந்தான்’

 • 3

  (மெத்தை போன்றவை அழுத்தத்தால்) உள்ளே அமுங்குதல்.

  ‘அவன் உட்கார்ந்ததும் அந்த மெத்தை உள்வாங்கியது’

 • 4

  (கருத்து முதலியவற்றை) கிரகித்தல்.

  ‘இருத்தலியல் தத்துவத்தை முழுமையாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே இந்த நாவலைப் புரிந்துகொள்ள முடியும்’