தமிழ் உளி யின் அர்த்தம்

உளி

பெயர்ச்சொல்

 • 1

  மரம் செதுக்குவதற்கான கூரிய, அகன்ற அடி விளிம்புடைய இரும்புப்பட்டை செருகப்பட்ட கருவி.

 • 2

  (செருப்பு தைப்பவர்கள்) தோலைக் கிழிப்பதற்குப் பயன்படுத்தும், மேற்குறிப்பிட்டதைப் போன்ற கருவி.

  ‘இரண்டு செருப்புகளையும் துருவித்துருவிப் பார்த்துவிட்டு, துண்டாகக் கிடந்த தோலை எடுத்து உளியால் கீறினான்’

 • 3

  கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.