தமிழ் ஊத்தை யின் அர்த்தம்

ஊத்தை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பொதுவாக) நாற்றமடிக்கும் (உடலின்) வியர்வை, அழுக்கு போன்றவை; (குறிப்பாக) நாற்றமடிக்கும் (பல்லின்) அழுக்கு.

  ‘ஊத்தை ஒழுகும் உடல்’
  ‘ஊத்தைப் பல்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு அழுக்கு.

  ‘கீழே விழுந்ததில் சட்டை ஊத்தையாகிவிட்டது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு மோசம்.

  ‘ஊத்தைப் பழக்கவழக்கங்கள்’
  ‘ஊத்தையானவர்களுடன் ஏன் சேருகிறாய்?’