தமிழ் ஊதியம் யின் அர்த்தம்

ஊதியம்

பெயர்ச்சொல்

 • 1

  நிறுவனம் ஒன்றில் செய்யும் பணிக்காக ஒருவருக்குக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை தரப்படும் பணம்; சம்பளம்.

  ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது’
  ‘துறைமுகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தார்கள்’
  ‘வேலையில் சேர்ந்தபின் வாங்கிய முதல் மாத ஊதியத்தை அம்மாவின் கையில் கொடுத்தேன்’

 • 2

  (திரைப்படம், நாடகம், இசைத் துறை போன்றவற்றில்) ஒருவர் தனது பங்களிப்புக்காக அல்லது உழைப்புக்காகப் பெறும் தொகை/(விளையாட்டு வீரர்களுக்கு) குறிப்பிட்ட அடிப்படையில் தரப்படும் சம்பளம்.

  ‘தெருக்கூத்து ஆட்டக்காரர்களுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ரூபாய் ஐநூறுவரை ஊதியம் தரப்படுகிறது’
  ‘ஒவ்வொரு படத்திற்கும் கோடிக் கணக்கில் ஊதியம் வாங்கும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள்’
  ‘ஹாக்கி வீரர்களுக்கும் தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள்’