தமிழ் ஊன்றி யின் அர்த்தம்

ஊன்றி

வினையடை

 • 1

  (கேட்டல், கவனித்தல், பார்த்தல் முதலிய வினைகளோடு வரும்போது) உற்று; உன்னிப்பாக.

  ‘ஊன்றிக் கவனித்தால்தான் இது புலப்படும்’
  ‘எங்கிருந்து வருகிறது இந்தச் சத்தம் என்று ஊன்றிக் கேட்டார்’

 • 2

  (படித்தல், சிந்தித்தல் போன்ற வினைகளோடு வரும்போது) ஆழ்ந்து; கூர்ந்து.

  ‘இந்தப் புத்தகத்தை அனைவரும் ஊன்றிப் படிக்க வேண்டும்’
  ‘ஊன்றி யோசித்தபோது அந்தக் கருத்து தவறு என்று எனக்குப் பட்டது’