தமிழ் ஊன்று யின் அர்த்தம்

ஊன்று

வினைச்சொல்ஊன்ற, ஊன்றி

 • 1

  உடல் குறிப்பிட்ட நிலையில் இருப்பதற்காகக் கையையோ காலையோ கம்பையோ ஓர் இடத்தில்) அழுத்தமாகப் பதித்தல்.

  ‘வயதானவர் கையை ஊன்றி மெதுவாக எழுந்து நின்றார்’
  ‘பெரியவருக்குக் காலில் அடிபட்டிருப்பதால் கம்பு ஊன்றி நடக்கிறார்’
  ‘கால்முட்டில் முழங்கையை ஊன்றி உள்ளங்கையில் முகவாயைத் தாங்கி வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்’

 • 2

  (விதையை) நிலத்தில் ஆழமாகப் பதித்தல்; (செடி, நாற்று, கம்பம் போன்றவற்றை) நடுதல்.

  ‘நாற்றை விரைவாக ஊன்றி முடித்துவிட்டார்கள்’
  உரு வழக்கு ‘அவர் மனத்தில் தவறான கருத்து ஊன்றப்பட்டது’

 • 3

  (வேர் நிலத்தில்) பதிதல்; நிலைகொள்ளுதல்.

  ‘மரத்தைப் பிடுங்கி மற்றோர் இடத்தில் நடுகிறபோது வேர் ஊன்றச் சில நாள் ஆகும்’