தமிழ் ஊர் யின் அர்த்தம்

ஊர்

வினைச்சொல்ஊர, ஊர்ந்து

 • 1

  ஒரு பரப்பை ஒட்டியவாறே நகர்தல்.

  ‘ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் பகுப்பில் பாம்பும் அடங்கும்’
  ‘தலையில் பேன் ஊர்கிறது’
  ‘இருட்டில் தரையில் ஊர்ந்தவாறு கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறினான்’
  உரு வழக்கு ‘பயம் முதுகுத்தண்டில் ஊர்ந்தது’

 • 2

  மெல்லச் செல்லுதல்.

  ‘வாகன நெரிசலில் பேருந்து ஊர்ந்துகொண்டிருந்தது’

 • 3

  பேச்சு வழக்கு அரிப்பு உண்டாதல்.

  ‘உடம்பு முழுவதும் கம்பளிப்பூச்சி கடித்ததுபோல் ஊர்கிறது’

தமிழ் ஊர் யின் அர்த்தம்

ஊர்

பெயர்ச்சொல்

 • 1

  மக்கள் வசிக்கும், எல்லைகள் வரையறுக்கப்பட்ட இடம்.

 • 2

  (ஊரில் வசிக்கிற) மக்கள்.

  ‘ஊரோடு ஒத்துப்போ’

 • 3

  மேற்குறித்த மக்களுக்குப் பொதுவானது.

  ‘ஊர்க் கிணறு’
  ‘ஊர்ப் பழக்கம்’

 • 4

  (ஒருவர்) பிறந்து வாழ்ந்த இடம்.

  ‘உங்களுக்கு எந்த ஊர்?’
  ‘ஊருக்குப் போய் நாளாகிவிட்டது’

தமிழ் ஊர் யின் அர்த்தம்

ஊர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக வரும்போது) உள்ளூரில் விளைந்தது.

  ‘நல்ல ஊர்ச் செத்தலாகப் பார்த்து வாங்கி வா’