தமிழ் ஊர்வாயை மூடு யின் அர்த்தம்

ஊர்வாயை மூடு

வினைச்சொல்மூட, மூடி

  • 1

    (எதிர்மறை வாக்கியத்தில் அல்லது எதிர்மறைத் தொடரில் வரும்போது) (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி) பிறர் இழிவாகப் பேசுவதைத் தடுத்தல்.

    ‘நீ செய்த தவறைப் பற்றி நாங்கள் வேண்டுமானால் பேசாமல் இருக்கலாம். ஊர்வாயை மூட முடியுமா?’
    ‘அவர் தன் பண பலத்தைப் பயன்படுத்தி ஊர்வாயை மூடிவிடலாம் என்று தவறாக எண்ணிவிட்டார்’