தமிழ் ஊற்று யின் அர்த்தம்

ஊற்று

வினைச்சொல்ஊற்ற, ஊற்றி

 • 1

  (திரவப் பொருள்களை) கீழே சாய்த்துக் கொட்டுதல்.

  ‘தண்ணீரைக் கீழே ஊற்றினாள்’

 • 2

  (ஒரு கலனுக்குள் திரவத்தை) விடுதல்.

  ‘பேனாவில் மை ஊற்று’
  ‘அவர் கண்ணாடிக் குவளையில் மது ஊற்றும் அழகே தனி’

 • 3

  (செடிகளுக்கு நீரை) பாய்ச்சுதல்; விடுதல்.

  ‘செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாயா?’

 • 4

  (திரவப் பொருள்) அதிக அளவில் வெளியேறுதல்; (மழை) பொழிதல்.

  ‘வெட்டுக்காயத்திலிருந்து இரத்தம் ஊற்றியது’
  ‘வானம் கிழிந்ததுபோல் மழை ஊற்றியது’

 • 5

  (அரைத்த மாவை) வார்த்தல்.

  ‘ஐந்தாவது தோசை ஊற்றுகிறேன்’
  ‘இட்லி ஊற்றாமல் எங்கே போனாய்?’

 • 6

  (கவனக் குறைவால்) சிந்துதல்.

  ‘அரிசி வடிக்கும்போது கஞ்சியைக் காலில் ஊற்றிக்கொண்டு துடித்துப்போனாள்’

தமிழ் ஊற்று யின் அர்த்தம்

ஊற்று

பெயர்ச்சொல்

 • 1

  (நிலத்திலிருந்து வரும் நீர், எண்ணெய் போன்றவற்றின்) சுரப்பு.

  ‘கிணற்றில் ஊற்று வற்றிவிட்டது’
  ‘மும்பைக் கடல் பகுதியில் பல எண்ணெய் ஊற்றுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்’
  உரு வழக்கு ‘அவர் ஒரு ஞான ஊற்று’

 • 2

  மேல் நோக்கிப் பீச்சும் நீர்.