தமிழ் ஊறுகாய் யின் அர்த்தம்

ஊறுகாய்

பெயர்ச்சொல்

  • 1

    (எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி தூவி எண்ணெயில் ஊற வைத்து அல்லது மாவடுவை உப்பு நீரில் ஊற வைத்துத் தயாரிக்கும்) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளும் தொடுகறி.