தமிழ் ஊழல் யின் அர்த்தம்

ஊழல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆட்சி, நிர்வாகம், தொழில் முதலியவற்றில் லஞ்சம் வாங்குதல், வேண்டியவருக்குச் சலுகை அளித்தல் போன்ற) முறைகேடு; நேர்மையின்மை.

    ‘ஊழலற்ற ஆட்சியை அமைக்கப்போவதாகக் கூறி அந்தக் கட்சியினர் மக்களின் ஆதரவைப் பெற்றனர்’
    ‘பொதுவாழ்வில் ஊழல்கள் மலிந்துவிட்டன’
    ‘தானியக் கொள்முதலில் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்’