தமிழ் எஞ்சு யின் அர்த்தம்

எஞ்சு

வினைச்சொல்எஞ்ச, எஞ்சி

 • 1

  மீதியாக அல்லது மிச்சமாக இருத்தல்; மிஞ்சுதல்.

  ‘வாங்கிய கடனுக்காகப் பிடித்தது போகச் சம்பளத்தில் எஞ்சியது சிறு தொகையே’
  ‘எஞ்சி உள்ள பிரச்சினை இது ஒன்றுதான்’

 • 2

  நீங்காமல் தங்குதல்; நிலைத்தல்; நீடித்தல்.

  ‘கோட்டை இருந்த இடத்தில் சில தூண்களே எஞ்சி நிற்கின்றன’
  ‘பரிணாம வளர்ச்சியில் வலிமை உடைய உயிரினங்கள் மட்டும் எஞ்சும் என்பார்கள்’