எட்டி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எட்டி1எட்டி2எட்டி3

எட்டி1

வினையடை

  • 1

    (சற்று) தள்ளி; (சற்று) தூரத்தில்; எட்ட.

    ‘பக்கத்தில் வராதே, எட்டிப் போ!’
    ‘நடக்கும் சண்டையைச் சற்று எட்டி நின்று கவனித்தான்’

எட்டி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எட்டி1எட்டி2எட்டி3

எட்டி2

வினையடை

  • 1

    (உடலை அல்லது உடலின் ஓர் உறுப்பை) நீட்டி.

    ‘கிணற்றை எட்டிப் பார்த்தபோது தலை சுற்றியது’
    ‘காற்றில் பறந்த கடிதத்தை எட்டிப் பிடித்ததில் கை சுளுக்கிக்கொண்டது’
    ‘பந்தை எட்டி உதைத்தான்’

எட்டி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எட்டி1எட்டி2எட்டி3

எட்டி3

பெயர்ச்சொல்

  • 1

    மருந்தாகப் பயன்படும் காயைத் தரும் ஒரு வகை மரம்.