தமிழ் எடுத்துக்கொடு யின் அர்த்தம்

எடுத்துக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (ஒருவர் பாடும்போதோ அல்லது பேசும்போதோ) நினைவூட்டும் வகையில் வரிகளை அல்லது விஷயத்தை அருகில் இருப்பவர் சொல்லி உதவுதல்.

    ‘பாட்டுப் போட்டிக்கு வந்த சிறுமி தடுமாறியதும் ஆசிரியர் அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தார்’
    ‘மேடையில் திரைக்கு அருகில் நடிகர்களுக்கு வசனங்களை எடுத்துக்கொடுப்பதற்காகவே ஒருவர் இருப்பார்’
    ‘அவன் பழைய குப்பைகளைக் கிளறிவிட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேறு எடுத்துக்கொடுக்க வேண்டுமா?’