தமிழ் எடுத்துக்கொள் யின் அர்த்தம்

எடுத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  உரிமையாக்கிக்கொள்ளுதல்; சொந்தமாக்கிக்கொள்ளுதல்.

  ‘இந்தப் பணத்தில் எனக்கு ஒரு பைசாக் கூட வேண்டாம். நீயே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்!’
  ‘வீட்டை அண்ணனும் நிலத்தைத் தம்பியும் எடுத்துக்கொண்டார்கள்’

 • 2

  (உதாரணமாக ஒன்றை) கருதுதல்; வைத்துக்கொள்ளுதல்.

  ‘என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்; நானும் பெரிய குடும்பத்தில் பிறந்தவன்தான்’