எடுபடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எடுபடு1எடுபடு2எடுபடு3

எடுபடு1

வினைச்சொல்எடுபட, எடுபட்டு

 • 1

  (ஒரு குழுவினரிடையே) வரவேற்கப்படுதல்.

  ‘எந்த மாதிரி கதை எழுதினால் வாசகரிடையே எடுபடும் என்று தெரிந்துவைத்திருக்கிறார்’
  ‘வெறும் வாக்குறுதிகள் இனிமேல் மக்களிடம் எடுபடாது’

 • 2

  ஏற்கப்படுதல்.

  ‘இந்த வாதம் நீதிமன்றத்தில் எடுபடுமா என்று வழக்கறிஞர் தன்னையே கேட்டுக்கொண்டார்’

எடுபடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எடுபடு1எடுபடு2எடுபடு3

எடுபடு2

வினைச்சொல்எடுபட, எடுபட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு பணிக்கு அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பிற்காக) தேர்ந்தெடுக்கப்படுதல்.

  ‘என் மகள் பல்கலைக்கழகத்திற்கு எடுபட்டிருக்கிறார்’
  ‘இந்த வேலைக்கு இதுவரை யாரும் எடுபடவில்லை’

எடுபடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எடுபடு1எடுபடு2எடுபடு3

எடுபடு3

வினைச்சொல்எடுபட, எடுபட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வலி) நீங்குதல்.

  ‘ஒரு முறை பத்துக் கட்டியவுடன் கை நோவு எடுபட்டுவிட்டது’