வினையடை
- 1
(சற்று) தள்ளி; (சற்று) தூரத்தில்; எட்ட.
‘பக்கத்தில் வராதே, எட்டிப் போ!’‘நடக்கும் சண்டையைச் சற்று எட்டி நின்று கவனித்தான்’
வினையடை
- 1
(உடலை அல்லது உடலின் ஓர் உறுப்பை) நீட்டி.
‘கிணற்றை எட்டிப் பார்த்தபோது தலை சுற்றியது’‘காற்றில் பறந்த கடிதத்தை எட்டிப் பிடித்ததில் கை சுளுக்கிக்கொண்டது’‘பந்தை எட்டி உதைத்தான்’
பெயர்ச்சொல்
- 1
மருந்தாகப் பயன்படும் காயைத் தரும் ஒரு வகை மரம்.