தமிழ் எதற்கும் யின் அர்த்தம்

எதற்கும்

இடைச்சொல்

 • 1

  முதலில் கூறப்படும் கூற்றின் எதிர்மறைத் தன்மையை மீறி முயற்சி செய்வதைக் குறிப்பதற்கு இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘எனக்கு அந்த வேலை கிடைக்காது என்று தெரியும். எதற்கும் நேர்காணலுக்குப் போய்ப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்’
  ‘அம்மாவிடம் பணம் இல்லை என்று நினைக்கிறேன். எதற்கும் கேட்டுப்பாரேன்’

 • 2

  ‘தேவைக்கு உதவும் என்னும் வகையில்’, ‘அவசியத்துக்கு’ என்ற பொருளைத் தரும் இடைச்சொல்.

  ‘எதற்கும் இந்தப் பணத்தைக் கையில் வைத்துக்கொள்’
  ‘சென்னையில் ஒரு வாரம் தங்குவதுபோல் ஆகிவிட்டால் என்ன செய்வது? எதற்கும் இரண்டு வேட்டி அதிகமாக எடுத்துக்கொண்டு வா’
  ‘எதற்கும் இருக்கட்டுமே என்று கொஞ்சம் அதிகமாகச் சமையல் செய்துவிட்டேன்’