தமிழ் எதிர்நோக்கு யின் அர்த்தம்

எதிர்நோக்கு

வினைச்சொல்-நோக்க, -நோக்கி

 • 1

  எதிர்பார்த்துக் காத்திருத்தல்.

  ‘அவர் வருகையை எதிர்நோக்கியிருக்கிறேன்’
  ‘அவர்கள் என்னை அழைப்பார்கள் என்று எதிர்நோக்கி நான் இங்கு நிற்கிறேன்’
  ‘சில நூற்பாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன’

 • 2

  (பிரச்சினை, அனுபவம் முதலியவற்றை) எதிர்கொள்ளுதல்.

  ‘தனது வாழ்வில் இன்பதுன்பங்களைச் சமமாக எதிர்நோக்கிய மனிதர் அவர்’
  ‘நாடு எதிர்நோக்கியிருக்கும் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம்’
  ‘கவிதைகளை மொழிபெயர்க்கும்போதுதான் நாம் நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும்’