தமிழ் எதிராளி யின் அர்த்தம்

எதிராளி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எதிரி; பகைவன்.

  ‘எதிராளி அவ்வளவு சீக்கிரம் ஏமாந்துவிட மாட்டான்’

 • 2

  பேச்சு வழக்கு (விளையாட்டு போன்றவற்றில்) எதிர்த்துப் போட்டியிடும் நபர்.

  ‘அவனுக்கு ஈடுகொடுத்து விளையாடுவதற்குச் சரியான எதிராளி அமையவில்லை’

 • 3

  பேச்சு வழக்கு (பேசுபவருக்கு அல்லது ஒரு சூழலில் ஒருவருக்கு) எதிரில் இருப்பவர்.

  ‘எதிராளி முட்டாள் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறான்’
  ‘மிகவும் கசப்பான உண்மையைக் கூட எதிராளி மனம் கோணாமல் சொல்வதில் வல்லவர்’

 • 4

  பேச்சு வழக்கு (கடிதம், தொலைபேசி போன்றவை தொடர்பாக வரும்போது) தகவல் பெறும் நபர்.

  ‘கடிதம் எழுதுவதில் உள்ள வசதி என்னவென்றால் எதிராளியை நாம் பார்க்க வேண்டாம்’
  ‘தொலைபேசியில் பேசும்போது எதிராளியின் முகம் தெரியாதிருப்பது சில சமயங்களில் கஷ்டமாக இருக்கிறது’