தமிழ் எதிரொலி யின் அர்த்தம்

எதிரொலி

வினைச்சொல்-ஒலிக்க, -ஒலித்து

 • 1

  எழுப்பப்படும் ஒலி (சுவர், மலை ஆகியவற்றில்) மோதி மீண்டும் கேட்கும்படி திரும்பி வருதல்; (ஒரு ஓசை) மீண்டும் ஒலித்தல்.

  ‘திரையரங்குகளில் ஒலி எதிரொலிப்பதைத் தடுக்க வழிமுறைகள் உண்டு’
  ‘குழந்தைகளின் கூச்சல் மண்டபம் முழுவதும் எதிரொலித்தது’

 • 2

  (ஒருவர் கருத்தை மற்றவர் பேச்சில் அல்லது எழுத்தில்) மாறுபாடு இல்லாமல் வெளிப்படுத்துதல்.

  ‘தலைமையாசிரியரின் கருத்தையே பிற ஆசிரியர்களும் தம்முடைய பேச்சில் எதிரொலித்தனர்’

 • 3

  (ஒன்றின் விளைவு மற்றொன்றில்) வெளிப்படுதல்.

  ‘பண மதிப்பின் வீழ்ச்சி உடனடியாகப் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும்’

தமிழ் எதிரொலி யின் அர்த்தம்

எதிரொலி

பெயர்ச்சொல்

 • 1

  (சுவர், மலை ஆகியவற்றில் பட்டு) மீண்டும் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி.

  ‘தவிலின் எதிரொலியால் மண்டபமே அதிர்வதுபோல் இருந்தது’

 • 2

  (ஒரு செயல் அல்லது கருத்து, பேச்சு முதலியவை ஏற்படுத்தும்) விளைவு; பாதிப்பு.

  ‘அண்மையில் நடந்த விபத்தின் எதிரொலியாக ரயில்வே அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்தார்’