தமிழ் என்கிற யின் அர்த்தம்

என்கிற

இடைச்சொல்

 • 1

  ஒருவர் அல்லது ஒன்று இரண்டு பெயர்களால் வழங்கப்படும்போது அந்த இரண்டு பெயர்களையும் இணைக்கும் இடைச்சொல்.

  ‘பாலு என்கிற பாலசுப்பிரமணியன்’
  ‘சுஜி என்கிற சுஜாதா’
  ‘மணமகன் ராமசாமி என்கிற வேழவேந்தன்’
  ‘இத்திட்டத்தின்படி பாண்டி ஆறு என்கிற ஹெலன் ஓடையிலிருந்து குடிதண்ணீர் எடுக்கப்படுகிறது’

 • 2

  ஒரு வாக்கியத்தின் இரண்டு பெயர்த்தொடர்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘நிதி நிறுவனம் என்கிற பெயரில் நடந்த மோசடிகளைக் குறித்து இன்று ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது’

 • 3

  ஒரு வாக்கியத்தின் இரண்டு கூற்றுகளை இணைக்கும் இடைச்சொல்.

  ‘அவளுக்கும் கனவுகள் இருக்கலாம் என்கிற எண்ணம் ஏன் உனக்குத் தோன்றவில்லை?’
  ‘குழந்தையின் தூக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுடன் மெதுவாக நடந்தான்’
  ‘அவர் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி எனக்கு வருத்தத்தை அளித்தது’