தமிழ் என்றால் யின் அர்த்தம்

என்றால்

இடைச்சொல்

 • 1

  நிபந்தனை வாக்கியத்தில் உள்ள இரண்டு பகுதிகளை இணைக்கும் இடைச்சொல்.

  ‘மழை பெய்யும் என்றால் பயிர்கள் பிழைக்கும்’

 • 2

  விளக்கப்படுவதுடன் விளக்கத்தை இணைக்கும் இடைச்சொல்.

  ‘மாணவன் என்றால் கற்பதில் அக்கறை உடையவன் என்பது பொருள்’
  ‘தலைவன் என்றால் சுயநலமில்லாமல் இருப்பவன்’
  ‘நாவாய் என்றால் கப்பல் என்று பொருள்படும்’