தமிழ் எப்படி யின் அர்த்தம்

எப்படி

வினையடை

 • 1

  எந்த விதமாக; எந்த நிலையில்; எந்த முறையில்.

  ‘அவரிடம் இந்தச் செய்தியை எப்படிச் சொல்வது?’
  ‘அப்பா எப்படி இருக்கிறார்?’
  ‘நீ ஊரிலிருந்து எப்படி வந்தாய்?’
  ‘வீட்டில் உன்னை எப்படி அழைப்பார்கள்?’

 • 2

  எந்த (உரிமையின்) அடிப்படையில்.

  ‘நீ இந்தக் கேள்வியை எப்படி என்னிடம் கேட்கலாம்?’
  ‘நீ எப்படி என் தம்பியை அடிக்கலாம்?’

 • 3

  எவ்வளவு தீவிரத்துடன் ஒரு செயல் நிகழ்ந்தது அல்லது நிகழும் என்பதைத் தெரிவிக்கும் சொல்.

  ‘குழந்தை எப்படிச் சிரிக்கிறது, பார்!’
  ‘அவள் எப்படி அழுதாள் தெரியுமா!’
  ‘இந்தச் சேவல்கள் எப்படிச் சண்டை போடும் தெரியுமா?’

 • 4

  தான் செய்தது அல்லது செய்யத் திட்டமிட்டிருப்பது தனக்கு மிகவும் திருப்தி தருவதைக் கேட்பவருக்கு உணர்த்தும் ஒரு சொல்.

  ‘எப்படி இருக்கிறது என் யோசனை!’
  ‘இதுதான் நான் போட்டிருக்கும் திட்டம், எப்படி!’