தமிழ் எப்பேர்ப்பட்ட யின் அர்த்தம்

எப்பேர்ப்பட்ட

பெயரடை

 • 1

  (ஒருவரின் அல்லது ஒன்றின் தன்மையைக் குறிக்கையில்) எந்த விதமான.

  ‘அவர் எப்பேர்ப்பட்ட சிக்கலையும் தீர்க்க வல்லவர்’

 • 2

  நல்லது ஒன்றின் உயர்வையோ மோசமான ஒன்றின் தாழ்வையோ மிகுதிப்படுத்திக் கூறப் பயன்படுத்துவது.

  ‘அவர் எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் தெரியுமா?’
  ‘எப்பேர்ப்பட்ட அயோக்கியன்!’
  ‘எப்பேர்ப்பட்ட கொடுமை!’