தமிழ் எம்பு யின் அர்த்தம்

எம்பு

வினைச்சொல்எம்ப, எம்பி

 • 1

  (குதிப்பதற்கு அல்லது உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு) காலை உந்தி உடலை உயர்த்துதல்.

  ‘ஆட்டுக் கிடாய் எம்பிப் பின்னங்கால்களில் நின்று முட்டத் தயாராயிற்று’
  ‘அவர் இருக்கிற உயரத்துக்கு எம்பாமலேயே முருங்கைக்காயைப் பறித்துவிடுவார்’

 • 2

  துள்ளுதல்.

  ‘அடிபட்ட குரங்கு கத்திக் கொண்டே எம்பிஎம்பிக் குதித்தது’