தமிழ் எல்லை யின் அர்த்தம்

எல்லை

பெயர்ச்சொல்

 • 1

  (அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை) முடியும் இடம்; இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி.

  ‘தாய்லாந்து எல்லையில் ராணுவக் குவிப்பு’
  ‘இந்தியாவின் வடக்கு எல்லையின் நீளம் சுமார் 8000 கிலோ மீட்டர்’
  ‘தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் முதுமலை அமைந்துள்ளது’
  ‘நகர எல்லையைத் தாண்டிச் செல்வதற்குச் சில வாகனங்களுக்கு அனுமதி இல்லை’
  ‘ஊரின் எல்லையில் ஓர் அம்மன் கோயில்’
  உரு வழக்கு ‘கோபம் எல்லையைக் கடந்துவிட்டது’
  உரு வழக்கு ‘எல்லையற்ற மகிழ்ச்சி’